ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள போனா பஜார் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக  பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து,இந்திய இராணுவத்தின் 23-வது பிரிவு மற்றும் ஷோபியானின் சிறப்பு நடவடிக்கை குழு இணைந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டையை தொடங்கினர். . அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதை அடுத்து  அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  இந்த துப்பாக்கிச்சூட்டில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டுள்ள பயங்கரவாதிகளில் ஒருவன், பாகிஸ்தானை சேர்ந்த வெடிகுண்டு நிபுணர் முன்னா லஹோரி என்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இவன், புல்வாமாவின் அரிஹால் கிராமத்தில் கடந்த 2018 ஜூன் மாதம் நடந்த குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவன்  என்றும் . இன்னொருவன், உள்ளூரை சேர்ந்த ஜீனத்-உல்-இஸ்லாம் என்பதும் தெரியவந்துள்ளது. பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

. கடந்த 2014ம் ஆண்டு முதல், கடந்த  5 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் மொத்தம் 963 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மக்களவையி்ல் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts