ஜம்மு-காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை  பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்

இந்தியா அமைதியை விரும்புவதால், ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை  பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லி : மே-26

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிபின் ராவத், ரம்ஜான் மாதத்தையொட்டி, ஜம்மு-காஷ்மீரிலும், இந்திய எல்லையிலும் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக கூறினார். அப்பகுதிகளில் அமைதி நிலவினால், ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்று தெரிவித்த பிபின் ராவத், தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தால் ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று எச்சரித்தார். காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் ஒரு பக்கமும்,  ராணுவத்தினரின் தாக்குதல் ஒரு பக்கமும் தொடர்ந்தால், இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் பிபின் ராவத் எச்சரித்தார்.

Related Posts