ஜம்மு – காஷ்மீர் எல்லைப்புறத்தில் பாகிஸ்தான் தாக்குதல்

ஜம்மு – காஷ்மீர் எல்லைப்புறத்தில் உள்ள குரேஸ் கிராமத்தின் மீது பாகிஸ்தான் படைகள் பீரங்கி குண்டுவீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

சர்வதேச போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு, இந்திய பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இருப்பினும், காஷ்மீரில் மிக பெரிய தாக்குதலை நடத்த பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தானில் அமைக்கப்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தானை சேர்ந்த 40 தீவிரவாதிகள் எல்லைத் தாண்டி காஷ்மீருக்குள் ஊடுருவி உள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர் எல்லை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, நேற்று ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் கத்துவாவில் நுழைந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த லாரியில் வந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்று பல அச்சுறுத்தல் சம்பவங்களில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காலை முதல் ஜம்மு காஷ்மீரின் எல்லை கிராமமான குரேசில் பீரங்கி குண்டுகள் வீசி பாகிஸ்தான் படை தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

Related Posts