ஜம்மு காஷ்மீர் தேர்தலில் பெரியளவிலான தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் ; உளவுத்துறை எச்சரிக்கை !

நாடு முழுவதும், வருகிற 11ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக, மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மொத்தமுள்ள 6 மக்களவைத் தொகுதிகளுக்கு, வருகிற 11ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 6ஆம் தேதி வரை, 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், ஜம்மு காஷ்மீரில், தேர்தல் சீர்குலைக்கும் வகையில் மாநித்தில் பல்வேறு இடங்களில் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

லஷ்கர்இதொய்பா, ஜெய்ஷ்இமுகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தீவிரவாதிகளை உள்ளடக்கிய 3 குழுக்களை பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைத்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts