ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் மாற்றங்களால் மக்கள் பலனடைவார்கள் : ராம்நாத் கோவிந்த்

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அந்தந்தப் பகுதி மக்கள் மகத்தான பலனடைவார்கள் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 73-வது சுதந்திர தின விழாவையொட்டி நாட்டு மக்களிடம் உரையாற்றிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சுதந்திர தினம் என்பது நாட்டு மக்களுக்கு ஒரு கொண்டாட்டமாக இருக்கும் என்று கூறினார்.

நாட்டின் விடுதலைக்காக உயிரை தியாகம் செய்த அனைவருக்கும் வணக்கம் செலுத்துகிறோம் என்று கூறிய அவர், நாடு இன்று சந்திக்கும் சவால்களை மகாத்மா காந்தி அன்றே தெரிந்து வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் ஜம்மு-காஷ்மீர், லடாக் மக்கள் பயனடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்,

370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு கல்வி உரிமை, இடஒதுக்கீடு கிடைக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் முத்தலாக் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது சிறப்பானது என்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

Related Posts