ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்வி

ஜம்மு காஷ்மீருக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் என்ன நிவாரணம் வேண்டும் ? என்று மனுதாரருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளது

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மனுத்தாக்கல் செய்தார். குடியரசுத் தலைவரின் இந்த உத்தரவு அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு , காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு நீக்க விவகாரத்தில் என்ன நிவாரணம் வேண்டும் ? உங்கள் கோரிக்கை என்ன ? என்று வழக்கு தொடர்ந்த எம்.எல்.ஷர்மாவிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேள்வியெழுப்பியுள்ளார்.

அரை மணி நேரம் படித்து பார்த்தும் உங்கள் மனுவை புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறியுள்ள நீதிபதிகள், மனுவில் உள்ள அனைத்து பிழைகளையும் சரி செய்து மீண்டும் தாக்கல் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

 

Related Posts