ஜாதி மதங்களை வைத்து ஆதாயம் தேடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அறிவுரை 

சமூக வலைதளத்தில் அதிக மத அளவிலான பிரசாரத்தை தடுக்க கோரி சுக்கானி என்பவர்  தொடர்ந்த வழக்கு உச்சநிதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.    அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் நோட்டீஸ் அனுப்பவுமே அதிகாரம் உள்ளது எனவும்,  அவர்களை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் இல்லை எனவும்  விளக்கம் அளித்தார். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,   ஜாதி, மதங்களை முன் வைத்து ஆதாயம் தேடும்  வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர். மேலும் வேட்பாளர்களை தீவிரமாக கண்காணிக்கவும் அறிவுரை வழங்கினர்.

Related Posts