ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாபஸ் பெற்றார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப. சிதம்பரத்தின் ஜாமீன் மனு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் கோரி கீழ் நீதிமன்றத்தை நாடாதது ஏன் என சிதம்பரம் தரப்பிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிதம்பரத்தின் மனு தொடர்பாக 7 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பினர். வீட்டில் சமைத்த உணவை அனுமதிக்க வேண்டும் என்ற சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், திகார் சிறையில் மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவையே சிதம்பரத்துக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ப.சிதம்பரம் திரும்ப பெற்றார்.

Related Posts