ஜார்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் 5 மாவோயிஸ்டுகள் பலி

ஜார்கண்ட் மாநிலம் லேட்கர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 5 மாவேயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.

ஜார்கண்ட் : ஏப்ரல்-04

சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த இந்த குழுவினரை தடுத்து நிறுத்த நக்சல் ஒழிப்பு படை என்ற தனிப்படை பிரிவு இயங்கி வருகிறது. காட்டுப் பகுதிகளில் மறைந்திருக்கு நக்சலைட்களையும், மாவோயிஸ்ட்களையும் இந்த தனிப்படையினர் கைது செய்தும், சுட்டுக் கொன்றும் வருகின்றனர்.

இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலம் லேட்கர் மாவட்டத்தில் உள்ள சிரந்தாக் காட்டுப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கு, மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த துப்பாக்கிச்சண்டையில், 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும்,  சுட்டுக் கொல்லப்பட்டவர்களிடம் இருந்து மூன்று ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts