ஜார்க்கண்டில் கண்ணி வெடியில் சிக்கி சிறப்புக் காவல் படையினர் 6 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணி வெடியில் சிக்கி சிறப்புக் காவல் படையினர் 6 பேர் உயிரிழந்தனர்.

ஜார்க்கண்ட் : ஜூன்-27

ஜார்க்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டத்தில் சிறப்புக் காவல் படையினர் ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த போது, நக்சலைட்டுகள் கண்ணி வெடியை புதைத்து வைத்து வெடிக்கச் செய்தனர். இதில், 6 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சில வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் பதுங்கியுள்ள நக்சலைட்டுகளை தேடி வரும் காவல்துறையினர், அவர்களுடன் துப்பாக்கிச் சண்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts