ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த மோதலில், 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட  மாநிலங்களில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிக் மாவட்டத்திற்குட்பட்ட பெல்பா காட் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதை அடுத்து இருதரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கி சண்டையில் 3மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு பாதுகாப்புபடை வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஒரு ஏ.கே. 47 துப்பாக்கி, 4 பைப் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படைவீர்ர்கள்  தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்

 

Related Posts