ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு நினைவஞ்சலி: பிரிட்டின் தூதர் அஞ்சலி 

ஜாலியன் வாலாபாக் படுகொலை பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடைபெற்றது. ஜெனரல் டயர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரிட்டன் ராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டதுடன், ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் வகையில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே அந்நாட்டு பாராளுமன்றத்தில் இந்தியாவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

இந்நிலையில் இந்தியாவுக்கான பிரிட்டன் துணை தூதர் இன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜாலியன் வாலாபாக் இடத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜாலியன் வாலாபாக்கில் உயிரிழந்த தியாகிகளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங், அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

 

 

Related Posts