ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரிலுக்கு விரைவில் திருமணம்

 

‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் மூலம் பிரபலமான ஷெரிலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

ஏப்ரல்-11

மோகன்லால் நடித்த மலையாளப் படத்தின் ப்ரொமோஷனுக்காக நடத்தப்பட்ட சேலஞ்சில் கலந்துகொண்டு ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஷெரில் குழுவினர் பிரபலமாகினர். உலகம் முழுக்க ட்ரெண்டான ஜிமிக்கி கம்மல் பாடலால் கொண்டாடப்பட்ட ஷெரில் தற்போது கேரளாவைச் சேர்ந்த மணமகனைக் கரம்பிடிக்க இருக்கிறார். இவருக்கு பல மொழிகளிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோதும் எதிலும் சரியான ஆர்வம் காட்டவில்லை.

ஷெரிலுக்கும் கேரளாவைச் சேர்ந்த ப்ரஃபுல் டோமி அமம்துருத்தில் என்பவருக்கும் சமீபத்தில் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

 

Related Posts