ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் – லால்சந்த் ராஜ்புத்

ஜிம்பாப்வே – இந்திய வீரர்

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் லால்சந்த் ராஜ்புத், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர்ர் லால்சந்த் ராஜ்புத், 1985 முதல் 1987 வரை இந்திய அணிக்காக  போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், 2007 ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் மேலாளராக லால்சந்த் பதவி வகித்துள்ளார். இதையடுத்து 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டார். இந்நிலையில், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புத் ஒப்பந்தம் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் ஜிம்பாப்வே அணியின் பயிற்சியாளராக தொடர்வார் எனவும், இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வாய்ப்புக்கு லால்சந்த் ராஜ்புத் நன்றி தெரிவித்ததோடு, சவால்களை சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறினார். முன்னதாக, ஜிம்பாப்வே அணிக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற முத்தரப்பு தொடர் மற்றும் பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடர்களுக்கு இடைக்காலப் பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புத் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Related Posts