ஜீவானந்தம் உள்ளிட்ட மூன்று பேர் ஆஜராகுபடி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன்

சிலை கடத்தல் வழக்கில் மாதவரம் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட மூன்று பேர் ஆஜராகுபடி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

           நெல்லை பழவூர் நாறும்பூநாதர் கோவிலில் கடந் 2015 ஆம் ஆண்டு 13 சிலைகள் திருடப்பட்டது. இந்த வழக்கில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. காசிஃப், இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள டி.எஸ்.பி காதர் பாட்ஷா, மாதவரம் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் உள்ளிட்டோருக்கும் விசாரணையில் ஆஜராகும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

           போலி சிலை மற்றும் போலி குற்றவாளிகளை வைத்து மோசடி செய்ததாக காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது புகார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts