ஜூராசிக் பார்க் படத்தில் வரும் பிரமாண்டமான வவ்வால் இனங்கள் பொய்யானவை

ஜூராசிக் பார்க் படத்தில் வரும் பிரமாண்டமான வவ்வால் இனங்கள் பொய்யானவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா : மே-26

60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த டைனோசர் குடும்பத்தைச் சேர்ந்த வவ்வால் போன்ற ஒரு உயிரினம் டெரோடாக்டைல்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த வவ்வால் இனங்கள் பறக்கும் திறன் கொண்டவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர். இத்தகைய வவ்வால்கள் ஜூராசிக் பார்க் படத்திலும் உயிரோட்டமாக காண்பிக்கப்பட்டது.

இதனிடையே, டெரோடாக்டைல்ஸ் வகை உயிரினங்கள் இருந்தது உண்மை என்றும் ஆனால் அவை பறக்கும் திறன் அற்றவை என்றும் அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் அர்மிதா மானாப்ஸதா தெரிவித்துள்ளார். தற்போதுள்ள வவ்வால்களைப் போல டெரோடாக்டைல்ஸ்களுக்கு திசுக்கள் மற்றும் தசை நார்கள் போதிய அளவில் வளர்ச்சி பெறவில்லை எனவும், இதன்காரணமாக அவை பறக்கும் திறன் பெற்றிருக்காது எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Related Posts