ஜூலை 1ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: எல்பிஜி சங்கம் அறிவிப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

 

இச்சங்கத்தில் உள்ள எல்பிஜி டேங்கர் லாரிகள், மத்திய அரசுக்கு சொந்தமான ஐ.ஓ.சி., பி.பி.சி., ஹெச்.பி.சி. ஆகிய எண்ணெய் நிறுவன சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு சமையல் எரிவாயுகளை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுவருகின்றன.

இந்த நிலையில், சுமார் 4500 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு அளிப்பதாக ஒப்புதல் அளித்திருந்த அதிகாரிகள், சுமார் 740 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு வாய்ப்பளிக்காமல் இழுத்தடிப்பதாக டேங்கர் லாரி சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.

அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கவில்லை என்றால், ஜூலை-1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்தம் நடைபெறும் பட்சத்தில் தென் மாநிலங்களில் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts