ஜெட் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரிக்கு,விமானிகள் சங்க வழக்கறிஞர் நோட்டீஸ்

நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால்  ஊழியர்களுக்கு  உரிய  நேரத்தில் ஊதியம் வழங்க முடியவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த விமானிகள் மற்றும் ஊழியர்கள், ஊதியபாக்கியை உடனடியாக வழங்கக்கோரி ஏப்ரல் 1ம் தேதி முதல்  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக விமானிகள் அறிவித்தனர். அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் டிசம்பர் மாதஊதியம் மட்டும் தருவதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏப்ரல் 15-ம் தேதி வரை தள்ளி வைக்கப்பட்டது.. இதனால், விமான சேவையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.  இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலானஊதியத்தைக் கேட்டு விமானிகள் சங்க, வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.உள்நாட்டு விமானிகள் சங்கமான என்ஏஜி சார்பில், ஜெட் ஏர்வேஸ் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபேக்கு அனுப்பப்ப்பட்டுள்ள  அந்த நோட்டீசில்,  ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான சம்பளத்தை ஏப்ரல் 14-ம் தேதிக்குள் வழங்காவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது. 

Related Posts