ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது பன்னாட்டு விமான சேவையை, ரத்து செய்திருக்கிறது

 

நிதி நெருக்கடி காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மறு அறிவிப்பு வரும்வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக இந்தியா முழுவதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமான சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து நள்ளிரவு 1.15 மணிக்கு பாரீஸுக்கும், காலை 11.25 மற்றும் மாலை 4.50 மணிக்கு மும்பைக்கும் 3 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் அந்த நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவிட்டன.

இதையடுத்து சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 3 விமானங்களையும் மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்வதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து முன்கூட்டியே பயணிகளுக்கு தகவல் தரப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Related Posts