ஜெயம் ரவியின் ’டிக் டிக் டிக்’ படம் ஜூன் 22ம் தேதி ரீலீசாகும் என அறிவிப்பு

 

 

சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி – நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் `டிக் டிக் டிக்‘  படம், ஜூன் 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் விண்வெளி படமாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் படம் `டிக் டிக் டிக்‘.  நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் சார்பில் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி – நிவேதா பெத்துராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் ஜனவரியில் ரிலீசாக இருந்தது. சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போன நிலையில், தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளர். அதன்படி படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயம் ரவியின் மகன் ஆரவ்-வும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ள இந்தப் படம் தணிக்கையில் யு சான்றிதழ் பெற்றுள்ளது.

 

Related Posts