ஜெயலலிதாவின் புதிய வெண்கலச்சிலை

  ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச்சிலை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

                தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது முழு உருவச் சிலை நிறுவப்பட்டது. ஆனால் ஜெயலலிதா சிலை, அவர் உருவம் போன்று இல்லை என பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டினர். இதனையடுத்து, ஜெயலலிதா உருவச்சிலை மாற்றி அமைக்கப்படும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்தது.

                இதனையடுத்து, கடந்த 4 மாதங்களாக ஜெயலலிதாவின் வெண்கல உருவச்சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக சிற்பி ராஜ்குமார் தெரிவித்தார். 8 அடி உயரமும் 800 கிலோ எடையும் கொண்டதாக உருவச்சிலை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தநிலையில், ஜெயலலிதாவின் உருவச்சிலை, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பத்திரமாக எடுத்து வரப்பட்டது.

Related Posts