ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய ஓ.பன்னீர் செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த வேண்டும்

Want create site? Find Free WordPress Themes and plugins.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய ஓ.பன்னீர் செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

      நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் இன்று ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனையில் ஒளிப்பேழையில் பதிவாகியிருந்தது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குரல்தான் என்று பிராமண பத்திரத்தில் தெரிவித்து இருந்ததும், மருத்துவர்கள் கூறியதும் ஒத்து போனதாக கூறினார். குறுக்கு விசாரணை செய்தபோது சாட்சிகள் முரண்படவில்லை எனவும், எனவே விசாரணை ஆணையம் தேவை என்று சொன்ன ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் செந்தூர்பாண்டியன் கூறினார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts