ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் இல்லை: அப்போலோ மருத்துவமனை பதில் மனு தாக்கல்

 

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் தங்களிடம்  இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை பதில் மனு  தாக்கல் செய்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-26 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரி பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான்தான் ஜெயலலிதாவின் மகள் என்பதை நிரூபிக்க மரபணு சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரியிருந்தார். இந்த வழக்கை ஏற்றுக்கொள்ளக்கூடாது என ஜெயலலிதாவின் உறவினர்களான தீபா மற்றும் தீபக் ஆகியோரும் இந்த வழக்கில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இதற்கு அரசுத் தரப்பும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் இருக்கிறதா என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை இன்று அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயல லிதாவின் ரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை என அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளது. மேலும், ரத்தம் மற்றும் சிறுநீரக மாதிரிகள் ஒரு ஆண்டிற்கு மேல் பாதுகாத்து வைக்க முடியாது என அப்பல்லோ நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

Related Posts