ஜெயலலிதாவின் ரூ.100 கோடி சொத்துக்களை கையகப்படுத்த அதிகாரிகள் ஆய்வு

 

 

சொத்துகுவிப்பு வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 100 கோடி ரூபாய் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான ஆய்வு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் ஜெயலலிதாவை தவிர மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரகார மத்தியச் சிறையில் 4 ஆண்டு தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூல் செய்வது மற்றும் 4 பேரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு தொடங்கியது. அப்போது, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், நெல்லை, தஞ்சை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கும் ஏராளமான சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 128 சொத்துக்கள் ஏற்கனவே அரசாணைகள் மூலம் முடக்கி கையகப்படுத்தப்பட்டது. அதில் 68 சொத்துக்கள் முறைகேடாக சம்பாதித்து வாங்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த 68 சொத்துக்களிலும் எவ்வளவு இடங்கள், எங்கெங்கு உள்ளன, அவற்றின் தற்போதைய மதிப்பு எவ்வளவு? அவற்றில் அரசுத் துறை கட்டிடங்கள் கட்டலாமா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 68 இடங்களையும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள். இந்த ஆய்வுப் பணிகள் எப்போது நிறைவு பெறும் என்று தெரியவில்லை. ஆய்வுப் பணிகள் முடிந்ததும் 68 சொத்துக்களையும் பறிமுதல் செய்வதற்கான அரசாரணையை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related Posts