ஜெயலலிதா ஆட்சி நடத்துவதாகக் கூறும் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அவருக்கு விசுவாசமாக இருந்தார்களா என மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை சோழிங்கநல்லூரில் திமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்குசேகரித்து கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணி  வெற்றியை உறுதி செய்யும் அளவிற்கு மக்கள் எழுச்சி திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறினார்.

அதிமுக அரசின் சாதனைகளைவிட மக்களுக்கு கொடுத்த வேதனைகளைதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் பட்டியலிட முடியும் எனக் கூறிய மு.க.ஸ்டாலின், தன்னை எம்.ஜி.ஆர் போல் நினைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி செயல்படுவதாகக் கூறி அவர் மைக் மாட்டியிருக்கும் விதத்தை கிண்டல் செய்தார்.

Related Posts