ஜெயலலிதா பெயரில் கலைமாமணி விருது

ஜெயலலிதா பெயரில் சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

திரைப்படம், எழுத்து உள்பட பல்வேறு துறைகளில் சிறந்த விளங்குவோருக்காக வழங்கப்படும் கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார்.

கடந்த 2011 முதல் 8 ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. பேரைவத் தலைவர் தனபால் தலைமை நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இந்த விழாவில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு பொற்பதக்கமும், சான்றிதழ்களையும், அகில இந்திய விருதாளர்களுக்கு சான்றிதழ்களும் தலா ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும், பொற்கிழியும், கேடயமும் வழங்கி கௌரவித்தார்.

விழாவில் பேசிய அவர் 3 அறிவிப்புகளை வெளியிட்டார். கலைமாமணி விருது 3 சவரனுக்குப் பதிலாக 5 சவரன் பொற்பதக்கங்களாக வழங்கப்படும் என தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் மூன்று சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் எனவும் இவையும் தலா 5 சவரன் பொற்பதக்கங்களாக வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை 2000-இல் இருந்து மாதந்தோறும் 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Posts