ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் மீண்டும் வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் மீண்டும் வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று காலை ஆஜரான அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது, அதற்கு முன் உள்ள நிகழ்வுகள், அந்தந்தத் தருணங்களில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள், எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் வெளிநாட்டு மருத்துவர்கள் அழைக்கப்பட்டது, மருத்துவ அறிக்கைகள் உள்ளிட்டவை குறித்து தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். தன்னை மீண்டும் ஆணையம் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு அழைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தமிழகத்திலேயே அதிநவீன சிகிச்சைகள் இருந்ததால் ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சையளிக்கத் தேவை ஏற்படவில்லை எனவும், சுகாதாரத்துறை செயலாளர் என்ற முறையில் தலைமைச்செயலாளர் ஒப்புதலோடு தான் மருத்துவ அறிக்கைகளை வெளியிட்டதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாக கூறினார்.

Related Posts