ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்

பயங்கர வாத இயக்கமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா உள்ளிட்ட 3 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், இப்பிரச்சனையை சர்வதேச அளவில் இந்தியா எழுப்பியது. பல்வேறு நாடுகளின் தூதர்களை அழைத்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வெளியுறவு அமைச்சகம் மூலம் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலின் தடை விதிக்கும் குழுவிடம் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் முறையிட்டுள்ளன. ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் தலைவனான மசூத் அசாருக்கு ஆயுதங்கள் வினியோகம் செய்வதை தடை செய்ய வேண்டும், அவனது சொத்துக்களை முடக்க வேண்டும், அசார் எந்த நாட்டிற்கும் செல்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை 3 நாடுகளும்வலியுறுத்தியுள்ளன.

Related Posts