ஜெய்ஸ்ரீராம் என சொல்லாத இஸ்லாமிய இளைஞர்களுக்கு சரமாரி தாக்குதல்

குஜராத்தில் ஜெய்ஸ்ரீராம் என சொல்லாத இஸ்லாமிய இளைஞர்கள் பேர்சரமாரியாகத் தாக்கப்பட்டனர்.

குஜராத் மாநிலம் கோத்ராவைச் சேர்ந்த மெக்கானிக் கடை வைத்திருக்கும் சித்திக் பகத் என்பவர் போலீசில் கொடுத்துள்ள புகாரில் இதைத் தெரிவித்துள்ளார்.

பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் சமீர், அவனது நண்பர்கள் சல்மான் கீதேலிசோஹைல் பகத் ஆகியோர் மோட்டர் சைக்கிளில் கடந்த வியாழக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது இரண்டு சைக்கிளில் வந்த பேர்இவர்களை நிறுத்திஜெய் ஸ்ரீராம் என கோஷம் போடும்படி கூறியுள்ளனர். மறுத்ததால்பயங்கரமான ஆயுதங்களால் அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கியுள்ளது. அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதுஇதுபற்றி வழக்குப் பதிவு செய்துள்ள கோத்ரா போலீசார், ‘’பாதிக்கப்பட்டவர்கள்பேசும் நிலையில் இல்லாததால் முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை என கூறியுள்ளனர். இருந்தாலும் சிசிடிவி காட்சிகளை பார்த்து பேரை கைதுசெய்துள்ளதாகவும், ஒருவரை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.சமீபகாலமாகஜெய் ஸ்ரீராம் சொல்லாதவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts