ஜெர்மனியில் பார்வையாளர்களை கவர்ந்த சிங்கக் குட்டிகள்

ஜெர்மனியில் உள்ள வனவிலங்குப் பூங்காவில், பெண் சிங்கம் ஒன்று ஈன்றுள்ள 3 குட்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஜெர்மனி : மே-31

ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் உள்ள வனவிலங்குப் பூங்காவில் பெண் சிங்கம் ஒன்று மூன்று அழகான குட்டிகளை ஈன்றுள்ளது. ஆண் சிங்கம் அவற்றை சந்திக்காத நிலையில், குட்டிகளை பாதுகாப்பதில் தாய் சிங்கம் தனி கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக, குட்டிச் சிங்கங்கள் மூன்றும் ஆணா? பெண்ணா? என்பதை அறிய முடியவில்லை. கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தாய் சிங்கம் மற்றும் அதன் மூன்று குட்டிகளின் நடமாட்டத்தையும், விளையாட்டையும் பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர்.

Related Posts