அரசியல்உலகம்

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலோ மெர்கல், பிரதமர் மோடி சந்திப்பு : 30க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது

அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலோ மெர்கல், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலோ மெர்க்கல் 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்த அவரை மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனையடுத்து ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், இருநாட்டு உறவு குறித்தும், சர்வதேச அளவிலான பிரச்சனைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துக்கிறார். இந்த சந்திப்பின்போது தொலைத்தொடர்பு, பாதுகாப்பு, வர்த்தகம் உளிட்ட துறைகளில் 30க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய தொழிலதிபர்கள் உள்ளிட்டோரையும் மெர்க்கல் சந்திக்க உள்ளார்.

Show More

Related News

Back to top button
Close