ஜோரம்தாங்காவை முதலமைச்சராக பதவியேற்க அம்மாநில ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுள்ள மிசோ தேசிய முன்னணியின் தலைவர் ஜோரம்தாங்காவை முதலமைச்சராக பதவியேற்க அம்மாநில ஆளுநர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் ஞாயிற்றுக்கிழமையன்று முதலமைச்சராக ஜோரம்தாங்கா பதவியேற்க உள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு முறை முதலமைச்சராக பதவி வகித்தவரான ஜோரம்தாங்கா இந்த முறை ஆட்சி பீடத்தில் இருந்த காங்கிரசை அகற்றி பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.

தாம் கணித்தது போலவே எம்.என்.எப் கட்சிக்கு 29 இடங்களும் காங்கிரசுக்கு 10 இடங்களும் கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

 

Related Posts