ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்லப்படுவது உபரி நீர் என்பதால்  பாதிப்பு ஏற்படாது

 

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,

கடந்த தேர்தலில் பொய்ப் பிரச்சாரம் செய்து வெற்றி பெற்ற திமுகவினர் தற்போது குடிநீர் தட்டுபாடு உள்ளதாக பொய் பிரச்சாரம் செய்வதாக குற்றம்சாட்டினார். ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு  காவிரி குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் உபரி தண்ணீர் தான் கொண்டு செல்லப்படுகிறது என்றும், இதனால் வேலூர் மாவட்ட மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

முன்னதாக குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து திமுக சார்பில் வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த திமுக பொருளாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், , ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் எடுத்துச் சென்றால் மாவட்டம் தழுவிய போராட்டத்தைச் சந்திக்க வேண்டி வரும் என எச்சரித்தார். வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முக்கிய  தண்ணீர்தான் முக்கிய பிரச்சனையாக இருக்கும் என்று அவர்  கூறினார்

 

இதனிடையே, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு  ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்வது குறித்து சென்னை குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் தமிழக குடிநீர் வாரிய அதிகாரிகள் இன்று ஜோலார்பேட்டைபகுதியில் உள்ள கேதாண்டப்பட்டி,பார்சனம்பட்டு,மேட்டுசக்கரக்குப்பம் ஆகிய மூன்று இடங்களில் உள்ள மேட்டூர் குடிநீர் சேமிப்பு மையங்களை ஆய்வு செய்தனர்.

 

Related Posts