ஞானவேல் ராஜாவுக்கு ராஜ்கமல் பட தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ்

10 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என கமல் மீது புகார் அளித்த ஞானவேல் ராஜாவிடம் விளக்கம் கேட்டு ராஜ்கமல் பட தயாரிப்பு நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தமவில்லன் பட வெளியீட்டிற்காக நடிகர் கமல்ஹாசன் தன்னிடம் 10 கோடி ரூபாய் பணம் பெற்று, 4 ஆண்டுகளாககியும் அதனை திருப்பித் தரவில்லை என ஸ்டுடியோ க்ரீன் நிறுவன உரிமையாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். ஞானவேல் ராஜா கூறுவதில் உண்மையில்லை என ராஜ்கமல் பட நிறுவனம் தெரிவித்தது. இந்நிலையில், ஞானல்வேல் ராஜாவிடம் விளக்கம் கேட்டு ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டு என நிரூபணமானால், கமல் மீது அளித்த புகாரை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்று கமல் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. மேலும்,  ஞானவேல் ராஜா மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

 

Related Posts