டாக்டர் அம்பேத்கரின் 128-வது பிறந்த நாள்:  குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மலரஞ்சலி 

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை  வடிவமைத்த மாபெரும் சிற்பியும், சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்க பாடுபட்டவருமான சட்டமேதை ‘பாரதரத்னா அம்பேதகரின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் எழுச்சியுடனும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லி நாடாளுமன்ற புல்வெளியில்நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலைக்கு முன்னே வைக்கப்பட்டு இருந்த  அவரது உருவப்படத்துக்கு குடியரசுத் தலைவர்  ராம்நாத்  கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதேபோல்,பல மாநிலங்களிலும் அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, குடியரசுத் தலைவர்  ராம்நாத்  கோவிந்த் தனது சுட்டுரைப்பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நாட்டின் தனிப்பெரும் அடையாளமாக திகழும் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய  அம்பேத்கர், சாதிகளற்ற, பாகுபாடுகளற்ற நவீன இந்தியாவை உருவாக்கவும், பெண்கள் மற்றும் நலிந்த மக்களுக்கான சம உரிமைகள் நிலைநாட்டப்படவும் தனது வாழ்நாள் முழுவதும் போராடியவர்என்று புகழாரம் சூட்டியுள்ளார். .

Related Posts