டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை

டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

 டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் அண்மை காலமாக அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய  தமிமுன் அன்சாரி, மியூசிக்கலி, டிக் டாக் செயலிஆபாச செயல்களுக்கும், சட்டஒழுங்கு பிரச்சனைகளுக்கும் வழிவகுப்பதால், அந்த செயலியை முடக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் மணிகண்டன், ப்ளூ வேல் சர்வர் ரஷ்யாவில் இருந்த போது அதனை தடுப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மூலமாக தமிழக அரசு மேற்கொண்டது எனவும் இதேபோல், டிக் டாக் செயலியையும் தடை செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் என தெரிவித்தார்.  இந்த செயலியின் தலைமை இடத்தை கண்டறிந்து தமிழகத்தில் இந்த செயலிக்கு தடை விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts