டிக்-டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை விதிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை  சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. மேலும் அந்த செயலி மூலம் எடுத்த வீடியோக்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது எனவும் உத்தரவிட்டது. இந்நிலையில், டிக்-டாக் செயலி தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை  முன்வைக்கப்பட்டது. ஆனால்,  அதனை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், உரிய தருணத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது

Related Posts