டிக் டொக் செயலியை பயன்படுத்த தடை ; உச்சநீதிமன்றம் உத்தரவு

டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி விடியோ எடுக்கவும் தொலைக்காட்சிகளில் வெளியிடவும் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கக் கோரி வழக்குரைஞர் முத்துக்குமார் என்பவர் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிராங்க் விடியோ என்ற பெயரில் டிக் டாக் செயலி மூலம் விடியோக்கள் எடுக்கவும், அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Posts