டிசம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்: ஓ.பி.ராவத்

தெலங்கானா உள்ளிட்ட  5  மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் அறிவித்துள்ளார்..

டெல்லியில், தேர்தல் ஆணையர்கள் சுனில் அரோரா, அசோக் லவாரா ஆகியோருடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓபி. ராவத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப்பேரவைப் பதவிக் காலம் ஜனவரியில் முடிவடைவதாகவும், மிஸோரம் சட்டப்பேரவை பதவிக் காலம் டிசம்பர் 15-ம்தேதியுடன் நிறைவு பெறுவதாகவும் கூறினார். மேலும் கலைக்கப்பட்ட தெலங்கானாவுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்படும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும்,. டிசம்பர் 15ம் தேதிக்குள் 5மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். எனவும் அவர் குறிப்பிட்டார். 5 மாநில தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை  அறிந்து கொள்ள ஒப்புகைச் சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும் எனவும் உச்ச நீதிமன்ற ஆலோசனைப்படி தகவல்கள் திரட்டப்படும். வேட்பாளர்களின் குற்றப்பின்னணி விவரம் இடம்பெறும் வகையில் பிரமாணப் பத்திர வடிவம் மாற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார். சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படும் எனவும், நவம்பர் 12-ம் தேதி முதற்கட்ட தேர்தலும், 20ம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். மத்தியப் பிரதேசம், மிசோரம் மாநிலங்களுக்கு நவம்பர் 28ம் தேதி ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் எனவும்,, ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு டிசம்பர் 7ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.5 மாநில தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் மாதம் 11ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓபி. ராவத் தெரிவித்தார். மழைக்காரணமாக தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் வேண்டாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியதாகவும், அவரது கோரிக்கையை ஏற்று திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலுக்கான தேதியை இப்போது அறிவிக்க இயலாது எனவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்,

Related Posts