டிரம்ப்-கிம் ஜாங் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

 

 

அமெரிக்க அதிபரான டிரம்பும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவுக்கு பகிரங்க அணு ஆயுத மிரட்டல் விடுத்து வந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அண்மைக்காலமாக தனது போக்கை முற்றிலுமாக மாற்றிக்கொண்டார். இனி அணு ஆயுத சோதனைகள் எதையும் நடத்தமாட்டோம் என்றும் அறிவித்தார். இதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசுவதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் கிம் ஜாங் அன் கூறினார். இதைத்தொடர்ந்து இரு தலைவர்களும் அடுத்த மாத மத்தியில் சந்தித்து பேசுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த சந்திப்பு எங்கு நடைபெறும் என்பது கூறப்படவில்லை. அமெரிக்க அதிபரான டிரம்பும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.  

Related Posts