ஐ.எஸ்.எல் 2019

டிராவில் முடிந்தது ஜம்ஷெட்பூர் எஃப் சி மற்றும் பெங்களுருவின் எஃப் சி களுக்கு இடேயேயான ஆட்டம்

ஐ எஸ் எல் 2019-20  6 வது சீஸனில் 15 வது நாள் ஆட்டமாக  இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் ஜம்ஷெட்பூர் எஃப் சி மற்றும் பெங்களுருவின் எஃப் சி அணிகள் மோதின. ஜம்ஷெட்பூரில் உள்ள ஜே.ஆர்.டி டாடா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற பெங்களுருவின் எஃப் சி கால்பந்து அணி முதலில் ஆட்டத்தை தொடங்கியது.

ஆட்டத்தின் தொடக்கத்திலே இருந்து இரு அணிகளும் கடுமையாக மோதின. 14 வது நிமிடத்தில் பெங்களுருவின் எஃப் சி அணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.துரதஷ்ட விதமாக  அந்த வாய்ப்பை பெங்களுருவின் எஃப் சி அணி தவரவிட்டது. 26 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணியின் சரன் வெளியேற்றப்பட்டு ஆஷிக் களம் இறக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் 41 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் திரிக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதையடுத்து ஆட்டத்தின் முதல் பாதி முடிவடைந்தது.

இதில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி – பெங்களூரு எஃப்சி அணிகள் 0 – 0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியது. 46 அவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியின் அன்கிட் வெளியேற்றப்பட்டு ஐசக் களம் இறக்கப்பட்டார். 54 ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிக்கு கோல் அடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கைநழுவிப் போனது.

இதே போல் 72 ஆவது நிமிடத்தில் பெங்களூரு அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதுவும் கைநழுவிப்போனது.77 மற்றும் 80 ஆவது நிமிடங்களில் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதே போல் 77 மற்றும் 88 ஆவது நிமிடங்களில் மீண்டும் இரு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இறுதி வரை இரு அணிகளுமே கோல் எதுவும் போடவில்லை. இதையடுத்து ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி – பெங்களூரு எஃப்சி அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 0 – 0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

 

Show More

Related News

Back to top button
Close