டி.கே.சிவக்குமாரை கைது செய்ததைக் கண்டித்து கர்நாடகாவில் வன்முறை

கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரை, பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்ததைக் கண்டித்து கர்நாடகாவில் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளது.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சிவக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்குப் பிறகு நேற்றிரவு சிவக்குமாரை கைது செய்தது. மருத்துவ பரிசோதனைக்காக ஆர்.எம்.எல். மருத்துவமனைக்கு சிவக்குமார் அழைத்துச் செல்லப்பட்ட போது அங்கு தொண்டர்கள் திரண்டனர். அவரை போலீசார் அப்புறப்படுத்தினர். சிவக்குமார் கைது செய்யப்பட்டிருப்பது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. கைது நடவடிக்கையை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு இன்று காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. அதன்படி, கர்நாடகத்தில் இன்று பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு சில இடங்களில் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. சில இடங்களில் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டன. ஆங்காங்கே சிவக்குமார் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கர்நாடகாவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதனியே கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

Related Posts