டி 20 டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில் 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரையும் கைப்பற்றியுள்ளது.

டி 20, ஒருநாள், டெஸ்ட் தொடர் என அனைத்திலும் வெற்றி பெற்று, வெஸ்ட் இண்டீசை இந்திய அணி ஒயிட்வாஷ் செய்துள்ளது. ஜமைக்கா, சபினா பார்க் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜஸ்பிரித் பும்ராவின் துல்லியமான வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 117 ரன்னுக்கு சுருண்டது. பும்ரா 6 விக்கெட் வீழ்த்தினர். 299 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 468 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 210 ரன்களுக்குள் சுருண்டது. இதனையடுத்து இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐசிசி உலக  டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 120 புள்ளிகளுடன் முதல் இடத்தை பெற்றுள்ளது. இதுவரை டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 28-வது வெற்றியை விராட் கோலி பதிவு செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக டெஸ்ட் போட்டியில் அதிக வெற்றிகளை பெற்றுத்தந்துள்ள டோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

Related Posts