டி20 போட்டிகளில் 300 சிக்ஸர்கள்: ரோகித் சர்மா புதிய சாதனை

 

 

20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 300 சிக்சர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். 

 

ஐபிஎல் டி20  தொடரில் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில்  நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடி மும்பை அணி வென்றது. இதில் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். அவர் 2 சிக்ஸர்களையும் அடித்தார். இதன்மூலம் டி20 போட்டிகளில் 300 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்தார். அவர், 301 சிக்ஸர்களுடன் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேசமயம் இந்திய அளவில் அதிக டி20 சிக்ஸர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில் 844 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெய்ல் முதலிடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து பொல்லார்டு (525), பிரண்டன் மெக்கல்லம் (445), வெய்ன் ஸ்மித் (367), ஷேன் வாட்சன் (357), டேவிட் வார்னர் (319) ஆகியோர் முறையே முதல் ஆறு இடங்களில் உள்ளனர்.

 

Related Posts