டெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 12ந் தேதி வரை நீட்டிப்பு

2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தின் மூலம்  விண்ணப்பங்கள்  விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த்து. இதனிடையே டெட் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது ஓடிபி எனப்படும் பாஸ்வேர்ட் பெறுவதில் கடந்த 3 நாட்களாக சிக்கல் இருந்ததால், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து டெட் தேர்வுக்கு  ஏப்ரல் 12ம் தேதி மாலை 5 மணி வரை www.trb.tn.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts