டெல்டா மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

தொடர் மழை காரணமாக  நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள்உத்தரவிட்டுள்ளனர்.கஜா புயலால் நாகை மற்றும் திருவாருர் தஞ்சை மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும்முழுமையாக நிறைவடையவில்லை. இந்நிலையில், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாகநாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து ஆட்சியர்கள்உத்தரவிட்டுள்ளனர். மேலும் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள்ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், தொடர் மழை காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார்.

Related Posts