டெல்டா மாவட்டங்களில் மூன்றாவது நாளாக மத்திய குழு ஆய்வு

புயல் பாதித்த பகுதிகளை  பார்வையிட்டு வரும் மத்தியக்குழு இன்று நாகை மாவட்டத்தில் சேதப்பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவகட்டங்ளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில்,, புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு நேற்று முன்தினம். புதுக்கோட்டையில் குளத்தூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. இதனை தொடர்ந்து வடகாடு பரம்மன்நகர், மாங்காடு, கந்தர்வகோட்டை பகுதியிலும் முதுகுளம் புதுநகர் உள்ளிட்ட இடங்களிலும் சேதப்பகுதிகளை பார்வையிட்டது.நேற்று, கஜா பாதித்த தஞ்சை ஒரத்தநாடு அருகே புதூர் கிராமம் பகுதியில் மத்திய குழு  ஆய்வு மேற்கொண்டு சேத விபரங்களை பதிவு செய்தது. மல்லிப்பட்டினத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் கேட்டறிந்தனர்.இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக, வேதாரண்யம் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேட்டைக்காரனிருப்பு, கோவில்பத்து, பெரிய குத்தகை, புஷ்பவனம், நாலுவேதபதி,விழுந்த மாவடி உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து இன்று பிற்பகல் மத்திய குழுவினர் காரைக்கால் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்

Related Posts