டெல்லியில் சோனியா, ராகுலுடன் மஜத தலைவர் குமாரசாமி ஆலோசனை

 

 

கர்நாடகத்தில்  கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி, முக்கிய ஆலோசனை நடத்தினார்.

கர்நாடக முதலமைச்சராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார். பெங்களூரு கண்டீரவா மைதானத்தில், பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லி சென்றுள்ள குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கர்நாடக அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது, கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சித்தராமையா, சிவக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை குமாரசாமி சந்தித்து பேசினார்.அப்போது தமது பதவியேற்பு விழாவுக்கு வரும்படி மாயவதிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

Related Posts