டெல்லியில் ஜுலை 2ந் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம்

டெல்லியில் வரும் ஜுலை 2ந் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி : ஜூன்-26

உச்சநீதிமன்ற உத்தரவின் படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்த ஆணையத்துக்கான உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்தது. மத்திய அரசும் ஆணைய தலைவர் மற்றும் பிரதிநிதிகளை நியமித்தது. ஆனால், இதற்கான உறுப்பினர்களை நியமிக்காமல் கர்நாடக அரசு தொடர்ந்து இழுத்தடித்து வந்தது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கர்நாடக உறுப்பினராக அம்மாநில நீர்வளத்துறை செயலாளர் ராஜேஷ்சிங்கையும், காவிரி ஒழுங்காற்று குழுவின் உறுப்பினராக பிரசன்னாவையும் நியமித்து முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், டெல்லியில் வரும் ஜுலை 2ந் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில்  நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் 4 மாநில அரசுகளுக்கும் இன்று அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts