டெல்லியில் ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் தங்களது  ஜந்தர் மந்தரில் போராட்டம்

கடன்சுமை காரணமாக ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம் சர்வதேச விமான சேவையை நிறுத்தியது. வங்கியிலிருந்து கடன் கிடைக்காத்தால் அனைத்து சேவைகளை நிறுத்தி உள்ளது.

இதனால் விமான பயணிகள் மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் ஊழியர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தங்களது பாதிப்பை வெளிப்படுத்தும் விதமாக ‘ஜெட் ஏர்வேஸ்’ ஊழியர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண் விமானிகள், பெண் ஊழியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு நிறுவனத்திற்கு வங்கி கடன் கிடைக்க உதவி செய்ய வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தினர்.

Related Posts